×

அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் வருண யாகம்

அவிநாசி,மே7:இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில், மழை வேண்டி, வருணயாகம் நடைபெற்று வருகின்றது. இதன்படி, அவிநாசியில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில், நேற்று வருணஜெபம், வருணயாகம் நடைபெற்றது. அவிநாசிலிங்கேசுவரர் கோயில் மண்டபத்தில், உற்சவ தெய்வங்களான உற்சவரான, கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரருக்கு முன்பு, கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. சிவாச்சார்யார்கள், குருக்கள் வருணஜெபம், வேத மந்திர பாராயணம் மற்றும் வருணகாயத்ரி மந்திர பாராயணம் செய்தனர்.

 மழை வேண்டி, சுந்தரமூர்த்திநாயனார் மற்றும் திருஞானசம்பந்தரின் மேகராக குறிஞ்சிப்பண்ணில் அமைந்த தேவாரப்பதிகம் ஓதுவார்கள் சுவாமிகளால் பாடப்பட்டன.  காலை முதல் நான்கு மணி நேரம் தொடர்ந்த, வருண யாகத்தின் முடிவில் கலச புனித நீரால், ஸ்ரீகருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரருக்கு அபிஷேகம், அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாத்திய கருவிகளினால், ‘மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி’ உள்ளிட்ட ராகங்களை கோவில் நாதஸ்வர வித்வான்கள் இசைத்தனர்.

Tags : Varuna Yagam ,Avinasilinkeswarar Temple ,
× RELATED மழை வேண்டி வருண யாகம்